Ads 468x60px

Pages

Thursday, September 30, 2010

அமரர் கந்தப்பெருமாள் பரமலிங்கம் அவர்களின் மறைவுக்கு இரங்கற்பா

தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலய வண்ணக்கர்
அமரர் கந்தப்பெருமாள் பரமலிங்கம் அவர்களின் மறைவுக்கு
இரங்கற்பா


குடிமரபின்கண் மக்கள் வாழ்
கோயில் வளர் தேனூர்
பதிவளரும் தமிழ் இயல்பினை
ஒட்டி பழம்பெரு பேனாச்சி
குடியின் பேர்கொண்ட
நீள் தலைவனே!

இன்று பரமனடி நீ சேர்ந்து
பரிதவிக்க எமை விட்டனயே!!
கார்மேகம் கலங்கி
கண்ணீர்ப் பூக்கள் தூவிச்செல்லும்.

கண்ணியமிகு காலனவனின்
கையினில் நழுவலாமோ...?
நீ செய்த சேவை போதுமென்று
எம்கண்ணில் விழுநீர் கங்கையாக
விட்புலம் சேர்த்தானோ எம்பெருமான்

கொம்புச்சந்தி பிள்ளையார்
ஆலய பரிபாலனசபை செயலாளராய்
பாலமுருகன் கோயில்
கண்ணகையம்மன் கோயில்
வண்ணக்கராய் நீவீர் ஆயினயே

கோயில் கோயில்
நடை நடந்து இன்று
இறைவனடி சேர்ந்தனயே
சிந்தை கலங்குதையா
நீ பிரிந்ததிலே
உன் ஆத்மா ஆறுதலடையட்டும்
உன் நித்திரை பூரணமடையட்டும்
இதய அஞ்சலி

Tuesday, April 13, 2010

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைத்து உறவுகளுக்கும் இனிய புதுவருட நன்நாள் வாழ்த்துக்கள்

Sunday, March 28, 2010

வட பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப்பெருவிழா 2010

தேற்றாத்தீவு வட பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப்பெருவிழா 2010


தேற்றாத்தீவு வட பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப்பெருவிழா 2010

Thursday, March 4, 2010

மரண அறிவித்தல் அமரர். பூபாலப்பிள்ளை செல்லையா

மரண அறிவித்தல்
அமரர். பூபாலப்பிள்ளை செல்லையா


அன்னைமடியில்: 31-01-1928                              இறைவன்பாதத்தில்: 04-03-2010

தேற்றாத்தீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர். பூபாலப்பிள்ளை செல்லையா
அவர்கள் 04-03-2010 இன்று இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் மாரிமுத்து அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான பூபாலப்பிள்ளை - கற்பகம் ஆகியோரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான
மார்க்கண்டு - கண்ணம்மை ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை, கண்ணகைப்பிள்ளை, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், குமாரசுவாமி, தெய்வானை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரும்,
தங்கப்பிள்ளை, காலஞ்சென்ற செல்லத்துரை, காலஞ்சென்ற பூரணிப்பிள்ளை, காலஞ்சென்ற சின்னமணி, மற்றும் ஆத்தப்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற செல்லத்தம்பி, சிவபாலன் (ஓய்வுபெற்ற ஆராய்ச்சியாளர்) ஆகியோரின் அன்புச் சகலனும்
ஏகாம்பரம், சந்திரபோதினி, சசிதேவி, புஸ்ப்பநாதன், இதயநாதன் (லண்டன்), கிருஸ்ணராஜா (லண்டன்), இரத்தினம்மா, கோமளாதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருளம்மா, கனகம்மா,உமாதேவி, உமாலெட்சுமி,வீரலெட்சுமி, கருணாகரன்,வெற்றிவேல் (பிரதேச செயலகம்,வெல்லாவெளி), அற்புதம் (இலங்கை மின்சார சபை,களுவாஞ்சிகுடி), சந்திரசோதி,பரமேஸ்வரி,திருமஞ்சணம், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்,ரவி ஆகியோரின் சிறியதந்தையும்,
சிவலிங்கம், லதா,சுந்தரலிங்கம்,யோகலிங்கம், சாந்தி, கலா, மகேஸ்வரி, விஸ்வலிங்கம், சிவநாதன் (இந்தியா), சிவானந்தம், காலஞ்சென்ற சிவதேவன், சிவகவிதா, சிவாகரன், சிவசுதா (டுபாய்) ஆகியோரின் பெரியதந்தையும்
சோமசுந்தரம், சீதேவிப்பிள்ளை, சங்கரப்பிள்ளை, பொன்மணிதேவி, யாழினி (லண்டன்), மகேஸ்வரி (லண்டன்), சிறிதரன், தங்கராசா, காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன் ( இலங்கைப் போக்குவரத்து சபை முன்னாள் ஊழியர்), சரஸ்வதி, புவனேஸ்வரராஜா (குவைத்), காலஞ்சென்ற தேவநாயகி, சந்திரமதி, திலகவதி, தவமணிதேவி, பரமேஸ்வரி, சிவமணி, அரசம்மா, புஸ்பராஜா, புஸ்பராணி (ஆசிரியை) அருளானந்தம், காலஞ்சென்ற யோகமணி, காலஞ்சென்ற யோகராசா, காலஞ்சென்ற தவராசா, யோகநாதன் (இலங்கை மின்சார சபை, களுவாஞ்சிகுடி), கலாநிதி, கோமளா, றோசாமலர் 
ஆகியோரின் மாமாவும்
பவானி, பவாசுதன்( டுபாய்), பவாஜினி, ஜெகநாதன்(கட்டார்), சசிகரன் (ஈராக்), விஜயராஜா, லக் ஷன், டனேஸ்காந், ஜனார்த்தினி (யூனியன் அசுரன்ஸ்) கிரிசாந்தன், அருணன், சிவகுலதாசன், தாட்சாயினி, சதீஸ்குமார், ரமணீஸ்வரி, தயாழினி, லோஜினி, கீர்த்திகா 
ஆகியோரின் அம்மப்பாவும்
தர்ஷனி, சுதர்ஜினி, சிவார்ஜினி, தயாபரன், சுதர்சன் (கட்டார்), பிறேமிலா, பிரவீன் (லண்டன்), தருணிகா (லண்டன்), லவீன் (லண்டன்), நிலூஜன் (லண்டன்), மேனுசான் (லண்டன்) ஆகியோரின் அப்பப்பாவும்
தினோத்,தேஜஸ்வின், சுஜத்விஸ் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.




அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்
குடும்பத்தினர்
தொலைபேசி: +94653657400

Sunday, January 31, 2010

ஆலய அடிக்கல் நிகழ்வு காளிகோவிலில்

நமது ஊரின் படபத்திரகாளி கோவிலில் நாகதம்பிரான் ஆலய பரிவாரக் கோயிலுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 29-01-2010 ஆந் திகதி நடைபெற்றது. இவ்வாலத்தை எமது கிராமத்தின் புலம் பெயர் உறவுகள் நிர்மாணித்து தருகிறார்கள் என்பது மட்டற்ற மகிழ்ச்சியே.

 

  

  


  

  

  

  

  

  

  

  

  

 
 

  
 

Tuesday, January 19, 2010

பொங்கல நிகழ்வு 2010 தை

நம்ம ஊரில் பொங்கல் என்றாலே பொங்கல் கோயில் என்று அன்றைய பொங்கல் நாள் கழியும். பொங்கல விடியற்காலையில் நம்ம அம்மா எழும்பி பொங்கலுக்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யத்தொடங்க நம்மளயும் எழுப்பிவிட்டா, பிறகென்ன அப்பா, அக்கா தேங்காய் துருவி பொங்கல் பானை ஏற்றினார்கள் அப்போ "உன்னை எதுக்கு எழுப்பினா" எண்டு யாரும் கேக்கணுமே.... பொங்கல் படைப்பது நான்தான் கடவுளுக்கு ஆனா அம்மாதான் நமக்கு ஊட்டிவிட்டாங்க.
பிறகு கோயில் தரிசனம். பொங்கல் தினம் நம்ம ஊரின் படபத்திரகாளி கோயிலில் புதிய கிணறு திறப்புவிழாவும் சுற்றுமதிலுக்குரிய அடிக்கல் நடும் வைபவமும் நடைபெற்றது. சரி பொங்கல் காலைப் பொழுதுகள் காட்சிகள்

இது எனது அம்மாவின் பொங்கல் படையல்

 
 

என்வீட்டு வாசல்
 

முற்றத்து மல்லிகை
 
காளிகோவில் பூசையும் பஜனையும் கிணறு திறப்பு விழாவும் சுற்றுமதில் அடிக்கல் நடும் நிகழ்வும்
 
 
 
 
கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கொம்புச்சந்திப் பிள்ளையார் கோவிலில்  (கொடை வள்ளல்களுக்காக)