இந்து சமயப் பண்பாடுகளை தடம் மாறாமல் இருக்க நல்ல கருத்துக்கள், சமய வழிகாட்டல்கள் மூலம் பிள்ளைகளின் ஒழுக்க விழுமியங்களுக்காக நம்ம ஊரில் அறநெறி வகுப்புக்கள் நடைபெறுவது வழக்கம். சமய சொற்பொழிவுகள், தேவாரப்பண்ணிசை, கோலம் போடுதல், இந்து சமய விழுமியங்கள் போன்றவற்றில் திறமை காட்டிய மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த 27-12-2009 ஞாயிற்றுக்கிழமை எமது தேற்றாத்தீவு மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக தேற்றாத்தீவு ஸ்ரீமத் தந்திரதேவா தபோவன ஆலோசகர் ஸ்ரீ ரவிஜீ ஐயா அவர்கள் கலந்துகொண்டார்.
நிகழ்வு இதுதான்:ஆரம்பம் சுனாமிப் பேரலையில் அகப்பட்டு மாய்ந்த அனைத்து உயிர்களின் ஆத்மா சாந்திக்காக
தலைமையுரை அறிநெறிப்பாடசாலை அதிபர் திரு.சோ. கணபதிப்பிள்ளை அவர்கள்
பிரதம விருந்தினர் ஸ்ரீ ரவிஜீ ஐயா அவர்களின் ஆசியுரை
பரிசளிப்பு நிகழ்வும் பிள்ளைகளும்
வாழ்த்துக்கள் பிள்ளைகளே...
இவ் அறநெறி வகுப்புக்களை மிகச் சிரமத்திலும் ஒழுங்காக நாடாத்தி வரும் அதிபர் அவர்களுக்கும் அனைத்து ஆசிரிய உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டி நிற்கிறோம்